search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் பார்க்கிங்"

    • திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பிரமாண்ட கார் பார்க்கிங் கட்டுமான பணி தொடங்கப்பட்டுள்ளது.
    • ஒரே நேரத்தில் 1,000 கார்களை நிறுத்த முடியும்

    திருச்சி :

    திருச்சி சர்வதேச விமான விரிவாக்கம் செய்யும் ஒரு பகுதியாக புதிய பயணிகள் முனையம் கட்டும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதற்காக ரூ.950 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இந்த புதிய பயணிகள் முனையம் 75 ஆயிரம் சதுர மீட்டர்களில் அமைக்கப்படுகிறது.

    இதுவரை 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. வருகிற 2023 ஜூன் மாதத்துக்குள் அனைத்து பணிகளும் பூர்த்தி செய்யப்பட்டு புதிய முனையம் பயன்பாட்டுக்கு வரும் என விமான நிலைய ஆணையக் குழு திட்ட பொது மேலாளர் ஸ்ரீகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

    தற்போதைய நிலையில் திருச்சி விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் இரண்டு பெரிய விமானங்களை மட்டுமே நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்க முடியும். ஆனால் இந்த புதிய முனையத்தில் ஒரே நேரத்தில் 11 பெரிய விமானங்களை பயணிகளை இறக்கி விட முடியும். பயணிகள் இறங்கிச் செல்ல வசதியாக பிரான் எனப்படும் தனி குகைவழிப்பாதைகளும் அமைக்கப்படுகிறது.

    மேலும் பயணிகளை அழைத்துச் செல்ல வசதியாக ஆயிரம் கார்கள் மற்றும் நான்கு பஸ்களை நிறுத்தும் அளவுக்கு புதிய கார் பார்க்கிங் வசதி புதிதாக இடம்பெறுகிறது. இந்த கட்டுமான பணிகள் சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த கார் பார்க்கிங் கட்டுமான பணி இன்னும் 9 மாதங்களில் நிறைவடையும் என விமான நிலைய ஆணையக் குழு அதிகாரிகள் உறுதி செய்தனர்.

    புதிய கார் பார்க்கிங் வசதிக்கு மட்டும் ரூ. 40 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி ஏற்படும். தற்போதைய நிலையில் புதிய பயணிகள் முனையத்தில் ரூ.92 கோடிக்கு ஏர் ட்ராபிக் கண்ட்ரோல் கோபுரம் உள்ளடக்கிய தொழில்நுட்ப மையம் அமைப்பதற்கான மூலப் பொருட்கள் வாங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    ×