செய்திகள்

இது 1817 அல்ல - 2017: ராஜஸ்தான் முதல்வருக்கு ராகுல் காந்தி டியூஷன்

Published On 2017-10-22 10:11 GMT   |   Update On 2017-10-22 10:11 GMT
ஊடகங்களுக்கு எதிராக அவசர சட்டம் இயற்றிய ராஜஸ்தான் அரசை கண்டிக்கும் வகையில் இது வெள்ளையர் ஆண்ட 18-ம் நூற்றாண்டு அல்ல, 21-ம் நூற்றாண்டு என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

ராஜஸ்தான் மாநிலத்தில், 'எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு எதிரான தனிநபர்களின் ஊழல் புகார்களை, அரசின் ஒப்புதல் பெறாமல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்று நீதிமன்றங்களுக்கு மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசு ஊழியர்கள்மீது தனிநபர்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை ஊடகங்கள் வெளியிட்டால், அது குற்றமாகக் கருதப்படும்' என்று வசுந்தரா ராஜே தலைமையிலான ராஜஸ்தான் மாநில அரசு புதிய அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி இன்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

 ராஜஸ்தான் அரசின் அவசர சட்டத்தின் நகலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, ‘நாம் 21-வது நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது 2017-ம் ஆண்டு-1817 அல்ல என்பதை மரியாதைக்குரிய ராஜஸ்தான் முதல் மந்திரி அம்மையார் அவர்களுக்கு மெத்தப் பனிவுடன் தெரிவித்து கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News