செய்திகள்

2015-ம் ஆண்டில் காற்று, நீர் மாசுக்களுக்கு இந்தியாவில் 25 லட்சம் பேர் பலி

Published On 2017-10-21 08:03 GMT   |   Update On 2017-10-21 08:05 GMT
உலகிலேயே இந்தியாவில் தான் காற்று, நீர் மற்றும் பிற மாசுகளுக்கு 2015-ம் ஆண்டில் அதிக அளவில் உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
புதுடெல்லி:

டெல்லி ஐ.ஐ.டி. நிறுவனம் அமெரிக்காவின் ஜஹான் மருத்துவமனை ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உலக நாடுகளில் நிலவும் மாசு குறித்து ஆய்வு மேற்காண்டனர்.

இந்த ஆய்வு அறிக்கை வெளியாகி உள்ளது. பல்வேறு மாசுகளினால் உலகம் முழுவதும் கடந்த 2015-ம் ஆண்டில் 65 லட்சம் பேர் உயிர் இழந்து உள்ளனர். இதில் பணிபுரியும் இடத்தில் நிலவும் மாசு காரணமாக 8 லட்சம் பேர் பலியாகி உள்ளனர் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

உலகிலேயே இந்தியாவில் தான் காற்று, நீர் மற்றும் பிற மாசுகளுக்கு 2015-ம் ஆண்டில் அதிக அளவில் உயிர் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. 25 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக சீனாவில் 18 லட்சம் உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

வேகமாக தொழில் மயமாகி வரும் இந்தியா, சீனா, வங்காளதேசம், மடகாஸ்கர், கென்யா போன்ற நாடுகளில் உலகில் 4-ல் ஒரு பங்கு உயிர் இழப்புகள் மாசு காரணமாக நேரிட்டுள்ளது.



ஆண்டுதோறும் நேரிடும் உயிர் இழப்புகளில் 90 லட்சம் பேரின் உயிர் இழப்புக்கு மாசுதான் காரணமாகும். அதாவது மொத்த உயிர் இழப்புகளில் 16 சதவீத உயிர் இழப்புகள் மாசு காரணமாகவே நேரிடுகிறது.

மாசுகளால் பாதிக்கப்படுவது, உலகின் பொதுவான ஏழைகள் மற்றும் நடுத்த மக்கள் என்று அந்த ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

காற்று மாசுபடுவதால் சிறுநீரகங்கள் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் குழந்தைகளின் நினைவு திறனும் பாதிக்கப்படுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Tags:    

Similar News