search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர் மாசு"

    • செங்கோட்டை சுற்றியுள்ள கிராமப் புறங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பங்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டவை உள்ளன.
    • வருங்காலத்தில் களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் காணாமல் போய்விடும்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, இலஞ்சி, தேன்பொத்தை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் புறங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பங்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டவை உள்ளன. இவர்கள் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா காலத்தில் களிமண்ணால் விநாயகர் சிலை தயாரித்து விற்பனை செய்து அதன் மூலம் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.

    இதில் செங்கோட்டை நகர் பகுதியில் மட்டும் சுமார் 50 முதல் 60 விநாயகர் சிலைகளை பல்வேறு வடிவங்களில் வாடிக்கையாளர் தேவைக்கு ஏற்ப 1 அடி முதல் 7 அடி வரை சுத்த களிமண்ணால் விநாயகர் சிலைகளை வடிவமைத்து விற்பனை செய்வார்கள். இவற்றை செங்கோட்டை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவிற்கும் ரூ. 1,000 முதல் ரூ.7,000 வரை விற்பனை செய்து லாபம் ஈட்டி வந்தனர்.

    இந்நிலையில் கடந்த சில வருடங்களாவே விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்காக ஆந்திரா, புதுச்சேரி, விஜயவாடா, திருப்பதி ஆகிய பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் தயாரிக்க தேவையான கிழங்குமாவு, காகித கூழ், ரசா யனங்கள் உள்ளிட்ட வை கொண்டு வரப்பட்டு அதன் மூலம் சிலைகள் தயாரித்து சிலர் விற்பனை செய்கின்றனர்.

    இதனால் அந்த சிலைகள் பல வண்ணங்களில் மக்களை ஈர்க்கும் வகையில் உள்ளதால், செங்கோட்டை மக்கள் களிமண்ணால் தயாரிக்கும் சிலைகளுக்கு மவுசு குறைந்துவிட்டது. நாகரீக வளர்ச்சி என்று கூறிக்கொண்டு, நீர்நிலைக ளை மாசுபடுத்தும் ரசா யனங்கள் கலந்த சிலைகளையே மக்கள் அதிகம் விரும்புவதால், களிமண் சிலை விற்பனை குறைந்து விட்டதாகவும், இதனால் வாழ்வாதாரம் பாதிப்ப டைந்துள்ளதாகவும் செங்கோட்டை சிலை தயாரிப்பாளர்கள் குமுறு கின்றனர்.

    இதே நிலை நீடித்தால் வருங்காலத்தில் களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் காணாமல் போய்விடும். இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×