செய்திகள்

குஜராத்தில் 25 லட்சம் விவசாயிகளுக்கு வட்டி இல்லாத கடன்: முதல்-மந்திரி அறிவிப்பு

Published On 2017-10-17 08:14 GMT   |   Update On 2017-10-17 08:48 GMT
குஜராத் மாநிலம் முழுவதும் 25 லட்சம் விவசாயிகள் எந்தவித வட்டியும் இல்லாமல் கடன் பெறலாம் என்று முதல்-மந்திரி விஜய் ரூபானி தெரிவித்தார்.
காந்திநகர்:

குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு 5-வது தடவையாக ஆட்சியைப் பிடிக்கும் முயற்சிகளில் பாரதிய ஜனதா கட்சி ஈடுபட்டுள்ளது. இதற்காக புதிய, கவர்ச்சிகரமான அறிவிப்புகளை பா.ஜ.க. வெளியிட தொடங்கியுள்ளது.

காந்தி நகர் அருகேயுள்ள கிராமத்தில் பா.ஜ.க.வின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. அந்த கூட்டத்தில் முதல்-மந்திரி விஜய் ரூபானி பேசினார். அவர் கூறியதாவது:-

விவசாயிகளுக்கு கடன்கள் வழங்க பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. எந்தவித வட்டியும் இல்லாமல் இந்த கடனை விவசாயிகள் பெறலாம்.

இந்த புதிய திட்டத்தின் கீழ் ஒவ்வொரு விவசாயியும் தலா ரூ.3 லட்சம் வரை அதிகபட்ச கடன் தொகை பெற முடியும். இதற்கான வட்டி எதையும் செலுத்த வேண்டியதில்லை. மாநில அரசு அதை பார்த்துக் கொள்ளும்.

அந்த வகையில் ஒவ்வொரு விவசாயிக்கும் 7 சதவீத வட்டித் தொகையை மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து வழங்கும். இதனால் குஜராத் மாநில அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரு.700 கோடி கூடுதல் செலவு ஏற்படும். இந்த திட்டம் காரணமாக மாநிலம் முழுவதும் 25 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News