செய்திகள்

நச்சுத்தன்மை: ரெயில்வே உணவை சாப்பிட்ட 26 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2017-10-15 14:51 GMT   |   Update On 2017-10-15 14:51 GMT
மும்பை சென்ற தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் விற்கப்பட்ட உணவை வாங்கி சாப்பிட்ட 26 பேர் நச்சுத்தனமையால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மும்பை:

கொங்கன் ரெயில்வே சார்பில் இயக்கப்படும் ரெயில் தேஜா எக்ஸ்பிரஸ். இது கோவாவில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு செல்கிறது.

இந்நிலையில், கோவாவில் இருந்து தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இன்று மும்பையை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில் பயணம் செய்த சில பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் செயல்படும் கேண்டீனில் உணவு சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் 26 பயணிகளுக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநிலம் சிப்லுன் ரெயில் நிலையத்தில் தேஜாஸ் ரெயில் நிறுத்தப்பட்டது. அங்கு பாதிக்கப்பட்ட பயணிகளை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என கொங்கன் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News