செய்திகள்

மத்திய, மாநில அரசுகளுக்கிடையே ஆளுநர்கள் சிறந்த பாலமாக இருக்க வேண்டும்: ஜனாதிபதி

Published On 2017-10-12 09:43 GMT   |   Update On 2017-10-12 09:43 GMT
மத்திய, மாநில அரசுகளுக்கிடையே ஆளுநர்கள் சிறந்த பாலமாக இருக்க வேண்டும் என மாநில ஆளுநர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியுள்ளார்.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் மாநில ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகிகளின் மாநாடு இன்று தொடங்கியது. ஜனாதிபதி மாளிகையில் இன்று தொடங்கிய இந்த மாநாட்டை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்.

இதில் அவர் பேசியதாவது, மக்கள் ராஜ்பவன் மீது அதிக எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர். ராஜ்பவனின் செயல்பாடுகள் உயர் நிலையை அடைந்தால் தான் மக்கள் சரியான உத்வேகத்தை பெற முடியும். கூட்டாட்சி தத்துவத்திற்கு இலக்கணமாக மத்திய மாநில அரசுகளுக்கு ஆளுநர்கள் சிறந்த பாலமாக செயல்பட வேண்டும். என்று கூறினார்.

மேலும், மக்களுக்கான எல்லா சேவைகளும் வெளிப்படையாகவும், வேகமாகவும் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். இந்த மாநாட்டில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News