செய்திகள்

பாராளுமன்றத்துடன் பீகார் சட்டசபைக்கு தேர்தல் நடத்த தயார்: மோடிக்கு நிதிஷ்குமார் கடிதம்

Published On 2017-09-26 06:10 GMT   |   Update On 2017-09-26 06:11 GMT
பாராளுமன்ற தேர்தலோடு பீகார் சட்டசபைக்கு தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக முதல்-மந்திரி நிஷ்குமார் பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் தெரிவித்து இருக்கிறார்.
புதுடெல்லி: 

பாராளுமன்ற தேர்தலுடன் அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் பல ஆயிரம்  கோடி செலவு மிச்சமாகும் என்று கூறப்பட்டுவருகிறது. 

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக நிதிஆயோக் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த  யோசனைக்கு ஜனாதிபதி, பிரதமர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகியோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மாநில முதல் மந்திரிகள், சட்ட நிபுணர்கள் உள்பட பல்வேறு தரப்பில் இருந்து மோடி கருத்துகளை  கேட்டுள்ளார்.  

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலோடு பீகார் சட்டசபைக்கு தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக முதல்-மந்திரி  நிஷ்குமார் பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் தெரிவித்து இருக்கிறார். 

ஒரே மாதிரியான தேர்தலுக்கு ஆயத்தமாகுமாறு கட்சி நிர்வாகிகளுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளார். பீகாரில் தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் 2020 நவம்பரில் முடிகிறது. சட்ட சபைக்கு முன்னதாக தேர்தல்  நடத்தினால் தங்களுக்கு பலன் கிடைக்கும் என்று ஐக்கிய ஜனதாதள கட்சி நம்புகிறது. 
Tags:    

Similar News