செய்திகள்

மன்மோகன் சிங்குக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

Published On 2017-09-26 04:39 GMT   |   Update On 2017-09-26 04:39 GMT
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இன்று 86-வது பிறந்த தினமாகும். இதையொட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:


முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இன்று 86-வது பிறந்த தினமாகும்.

இதையட்டி இன்று காலை அவருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பிரதமர் மோடியும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் இணையதள பக்கத்தில் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தாங்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News