செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் முதல் இ-கோர்ட்: தலைமை நீதிபதி தொடங்கி வைத்தார்

Published On 2017-09-22 09:13 GMT   |   Update On 2017-09-22 09:13 GMT
ஜம்மு-காஷ்மீரில் முதல் இ-கோர்ட் வசதியை ஸ்ரீநகர் கோர்ட்டில் அம்மாநில ஐகோர்ட் தலைமை நீதிபதி பதார் டுரேஸ் தொடங்கி வைத்தார்.

ஸ்ரீநகர்:

இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் அனைத்து விவரங்களும் பேப்பர்களில் அச்சிடப்பட்டு சேமித்து வைக்கப்படுகின்றன. இதனால் இவற்றை சேமிக்க அதிக இடம் தேவைப்படுகிறது. மேலும் ஏதேனும் வழக்கு தொடர்பான கோப்புகளை தேடுவதற்கும் அதிக நேரம் செலவாகிறது. மேலும் அவற்றை பாதுகாப்பதும் தனி வேலையாகி போகிறது.

இந்த பிரச்சனைகளை சரிசெய்வதற்காக அனைத்து விவரங்களையும் கணிணி மூலம் இணையதளத்தில் சேமித்துவைக்கும் இ-கோர்ட் திட்டத்தை சில கோர்ட்டுகளில் அரசு அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் விவரங்களை எளிதாக இடப்பிரச்சனை இன்றி பாதுகாப்பாக சேமித்து வைக்கமுடியும். மேலும் அவற்றை எந்த நேரத்திலும் இணையதளம் மூலம் எளிதாக பார்க்க முடியும். இதன்மூலம் ஒரு வழக்கை முடிக்க எடுத்துகொள்ளும் நேரமும் குறையும்.

இந்நிலையில், இந்த திட்டம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இ-கோர்ட் வசதியை ஸ்ரீநகர் கோர்ட்டில் அம்மாநில ஐகோர்ட் தலைமை நீதிபதி பதார் டுரேஸ் நேற்று தொடங்கி வைத்தார். இந்த திட்டம் நான்கு மாத காலத்திற்குள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு அனுமதியும், நிதியுதவியும் வழங்கிய தலைமைச்செயலாளருக்கு தலைமை நீதிபதி நன்றி தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் மூலம் அனைத்து விவரங்களையும் சரியாக வைத்துக்கொள்ளமுடியும். மேலும் இயற்கை பேரிடரினால் பாதிப்படையாமலும் பார்த்துக்கொள்ள முடியும் என பதார் டுரேஸ் தெரிவித்தார். 
Tags:    

Similar News