செய்திகள்

உத்தரப்பிரதேசம்: பிரதமர் மோடி இன்று வாரணாசி பயணம்

Published On 2017-09-22 02:28 GMT   |   Update On 2017-09-22 02:28 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலம் சட்டசபை தேர்தலுக்கு பிறகு பிரதமர் மோடி தனது தொகுதியான வாரணாசிக்கு இன்று முதல் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதி பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியாகும். இங்கு நடந்த சட்ட்சபை தேர்தலில் பா.ஜ.க. வென்று ஆட்சியை கைப்பற்றிய பின்னர், பிரதமர் மோடி இன்று வாரணாசி தொகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இதுதொடர்பாக பா.ஜ.க.வினர் கூறுகையில், முதல் நாளில் வாரணாசியில் இருந்து குஜராத் வரை செல்லும் மஹானாமா விரைவு ரெயிலை வீடியோ கான்ப்ரன்சில் தொடங்கி வைக்கிறார். மேலும் பல நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். ராமாயணம் குறித்த அஞ்சல் தலையையும் மோடி வெளியிடுகிறார்.

அதைதொடர்ந்து நாளை, பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின கீழ் பயன்பெறுவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி உரையாற்றுகிறார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News