செய்திகள்

மலப்புரம் அருகே ரூ.6 லட்சம் கள்ளநோட்டுகளுடன் 3 பேர் பிடிபட்டனர்

Published On 2017-09-21 10:56 GMT   |   Update On 2017-09-21 10:57 GMT
மலப்புரம் அருகே ரோந்து பணியின்போது ரூ.6 லட்சம் கள்ளநோட்டுகளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி பஸ் நிலை பகுதியில் போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசாரை பார்த்ததும் 3 பேர் தாங்கள் வைத்திருந்த பையுடன் தப்பி ஓடினர். இதனால் போலீசார், சந்தேகமடைந்து அவர்களை விரட்டி மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவர்கள் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். இதில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளாக ரூ.6 லட்சத்துக்கு கள்ளநோட்டுகளாக வைத்திருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவர்கள் 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் மன்னார்காடு பகுதியை சேர்ந்த முகமது செரீப் (வயது 35), சபீர் அலி (36), தஸ்கையா (39) என தெரிய வந்தது.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், கைதான 3 பேரும் கள்ளநோட்டை கொடுத்து நல்ல நோட்டுகளை பெற்று கொள்ளும் நபர்கள் என தெரிய வந்தது. இவர்களிடம் கள்ளநோட்டுகளை பெற வந்த நபர்கள் யார்? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News