செய்திகள்

ஊழல் வழக்கில் ஒடிசா ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி கைது: சி.பி.ஐ. நடவடிக்கை

Published On 2017-09-21 08:56 GMT   |   Update On 2017-09-21 08:56 GMT
தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதித்ததில் நடந்த ஊழல் தொடர்பாக ஒடிசா ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதியை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
புதுடெல்லி:

ஒடிசா மாநில ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி இஷ்ரத் மஸ்ரூர் குத்தூசி.

இவர் மீது சி.பி.ஐ. ஊழல் வழக்கு பதிவு செய்து இருந்தது. சுப்ரீம் கோர்ட்டால் தடை செய்யப்பட்ட தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதித்தது தொடர்பாக குத்தூசி உள்பட 5 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஊழல் வழக்கு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி குத்தூசி வீடு உள்பட 8 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். லக்னோ, புவனேஸ்வரத்தில் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையின் அடிப்படையில் ஒடிசா ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி இஷ்ரத்மஷ்ரூர் குத்தூசி, இடைத்தரகர் பிஸ்வத் அகர்வாலா, லக்னோ தனியார் மருத்துவ கல்லூரி உரிமையாளர்கள் பி.பி. யாதவ், பலாஷ் யாதவ், ஹவாலா ஏஜெண்டு ராம்தேவ் சராவத் ஆகிய 5 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர்கள் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.
Tags:    

Similar News