செய்திகள்

பெங்களூரு பரப்பன அக்ரஹஹார சிறையில் சசிகலாவுடன் ரங்கசாமி- டாக்டா அனுராதா சந்திப்பு

Published On 2017-09-21 06:10 GMT   |   Update On 2017-09-21 06:10 GMT
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ ரங்கசாமி மற்றும் தினகரனின் மனைவி டாக்டா அனுராதா தினகரன் ஆகியோர் நேற்று சந்தித்து பேசினார்கள்.
பெங்களூருரு:

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ ரங்கசாமி மற்றும் தினகரனின் மனைவி டாக்டா அனுராதா தினகரன் ஆகியோர் நேற்று சந்தித்து பேசினார்கள். அவர்கள் என்ன பேசினார்கள் என்ற விவரம் தொயவில்லை.

வழக்கமாக 15 நாட்களுக்கு ஒரு முறை சசிகலாவை உறவினாகள் சந்தித்து பேச அனுமதி உண்டு அதன்படி கடந்த 17 நாட்களுக்கு முன்பு தினகரன் சந்தித்து பேசினார். அதன் பிறகு தினகரனின் மனைவி டாக்டா அனுராதா மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.ரங்கசாமி ஆகியோர் நேற்று சந்தித்து பேசி உள்ளனர்.

இனி 15 நாட்களுக்குப் பிறகுதான் சசிகலாவை யாரும் சந்திக்க முடியும். இதனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தங்கதமிழ் செல்வன் உள்பட மற்ற எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தினகரன் ஆகியோர் 15 நாட்களுக்குப்பிறகுதான் சசிகலாவை சந்திக்க முடியும். இதனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சசிகலாவை சந்திக்காமலேயே தமிழகம் திரும்ப உள்ளனர்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் நேற்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்பார்த்து காத்து இருந்தனர். தங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என்றும், தகுதி நீக்க உத்தரவுக்கு தடை வரும் என்றும் எதிர்பார்த்து இருந்தனர்.

ஆனால் தகுதி நீக்க உத்தரவுக்கு தடை கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் பெண் எம்.எல்.ஏ. ஒருவர் கதறி அழுதார். சில எம்.எல்.ஏக்கள் ஏமாற்றம் அடைந்துது தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

Tags:    

Similar News