செய்திகள்

ஓய்வு பெறும் மத்திய அரசு பணியாளர்களுக்கு உதவும் புதிய ஆப்ஸ்: டெல்லியில் நாளை அறிமுகம்

Published On 2017-09-19 09:49 GMT   |   Update On 2017-09-19 09:49 GMT
மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெறுபவர்களுக்கு சேர வேண்டிய பென்ஷன் மற்றும் இதரப் பணப் பலன்கள் விரைவாக கிடைப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களை களைய நாளை புதிய ஆப்ஸ் அறிமுகம் செய்யப்படுகிறது.
புதுடெல்லி:

மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெறுபவர்களுக்கு சேர வேண்டிய பென்ஷன் மற்றும் இதரப் பணப் பலன்கள் கிடைப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களை களைய நாளை புதிய ஆப்ஸ் அறிமுகம் செய்யப்படுகிறது.

ஏற்கனவே ஓய்வூதியதாரர்களுக்கு கைபேசிகளில் தரவிறக்கம் செய்யும் வகையில் இதைப்போன்ற ஒரு ஆப்ஸை வெளியிட்டுள்ள மத்திய அரசு, விரைவில் ஓய்வுப்பெறவுள்ள அரசு அலுவலர்களின் பணிக்கொடை உள்ளிட்ட பணப் பலன்களை அடைவதற்கும், தங்களது கோப்புகளின் பரிசீலனை எந்த மட்டத்தில் உள்ளது? என்பதை தெரிந்து கொள்ளவும் இந்த செயலி பயனுள்ளதாக அமையும்.

மேலும், தங்களது புகார்கள் மற்றும் கோரிக்கை தொடர்பாகவும் இந்த ஆப்ஸ் மூலம் பயனாளிகள் பென்ஷன் துறை உயரதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

டெல்லியில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை இணை மந்திரி ஜித்தேந்திரா சிங் இந்த செயலியை வெளியிட்டு அறிமுகப்படுத்தி வைக்கிறார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவுப்படி, ஓய்வு பெறவுள்ள மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் துறையில் ஆற்றிய சேவை தொடர்பான அனுபவங்களை பிற அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளும் ‘அனுபவ்’ திட்டத்தின்கீழ் 17 ஓய்வூதியதாரர்களுக்கு ‘அனுபவ்-17’ விருதுகளையும் ஜித்தேந்திரா சிங் வழங்குவார் என மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News