செய்திகள்

எல்லையில் பலியான வீரரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்கப்படும்: உ.பி. மந்திரி அறிவிப்பு

Published On 2017-09-16 06:10 GMT   |   Update On 2017-09-16 06:10 GMT
எல்லையில் பலியான வீரரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்கப்படும் என உ.பி. மந்திரி ஸ்ரீகாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
லக்னோ:

காஷ்மீர் மாநில எல்லைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

ஜம்மு மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைந்து இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தான் நேற்றும் தாக்குதல் நடத்தியது. இதில் உ.பி.யின் பாலியா மாவட்டத்தின் வித்யாபவன் நாராய்பூர் கிராமத்தை சேர்ந்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர் பிஜேந்தர் பகதூர் உயிரிழந்தார்.



இந்நிலையில், பகதூரின் இறுதி சடங்கு அவரது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் இன்று நடைபெற்றது. இதில் உத்தரப்பிரதேச மந்திரி ஸ்ரீகாந்த் சர்மா உள்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது சர்மா கூறுகையில், எல்லையில் பலியான வீரரின் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் வழங்கப்படும். அவரது துணிவை போற்றும் வகையில் நினைவு தூண் மற்றும் நினைவிடம் அமைக்கப்படும். விளையாட்டு மைதானத்துக்கு அவரது
பெயர் வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News