செய்திகள்

தமிழகத்தில் தொழில் நகரம் அமைக்கப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு

Published On 2017-09-14 13:36 GMT   |   Update On 2017-09-14 13:36 GMT
குஜராத் காந்தி நகரில் நடைபெற்ற இந்தியா- ஜப்பான் உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தில் தொழில் நகரம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்:

ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே குஜராத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி உள்பட முக்கிய பிரமுகர்கள் நேற்று சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதை தொடர்ந்து ஷின்ஸோ அபே மற்றும் அவரது மனைவி ஆகியோர் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமம் சென்று பார்வையிட்டனர்.  இதையடுத்து, இன்று காலை மும்பை - அகமதாபாத் இடையிலான புல்லட் ரெயில் திட்டத்துக்கு பிரதமர் மோடி, ஷின்ஸோ அபே அடிக்கல் நாட்டினர்.

இதைதொடர்ந்து, இந்தியா-ஜப்பான் உச்சி மாநாடு காந்தி நகரில் இன்று நடைபெற்றது. அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

இந்தியாவில் மினி ஜப்பானை பார்க்கவேண்டும் என்பதே எனது கனவு. அந்த கனவு விரைவில் நிறைவேறும். வைப்ரண்ட் குஜராத் திட்டத்தின் மூலம் ஜப்பானுடன் இணைந்து செயல்படும் முதல் மாநிலமாக குஜராத் உள்ளது.  தமிழகம், ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஜப்பான் நாட்டு உதவியுடன் தொழில் நகரம் அமைக்கப்படும்.

இருபத்தொன்றாம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு. உலகளவில் வளர்ச்சிக்கான புதிய மையமாக ஆசியா விளங்கி வருகிறது. எனவே அதிகளவிலான ஜப்பானிய மக்கள் இந்தியாவுக்கு வந்து நிறுவனங்கள் தொடங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News