செய்திகள்

சபாநாயகர் நோட்டீசுக்கு பேக்ஸ் மூலம் பதில் அனுப்பப்படும்: தினகரன் ஆதரவாளர் பேட்டி

Published On 2017-09-14 05:54 GMT   |   Update On 2017-09-14 05:54 GMT
சபாநாயகரின் நோட்டீசுக்கு உரிய விளக்கத்தை நேரில்தான் அளிக்க வேண்டும் என்பது இல்லை. பேக்ஸ் மூலமும் அனுப்பலாம் என்று தினகரன் ஆதரவாளர் கூறினார்.

பெங்களூரு:

தினகரன் ஆதரவாளரும், வக்கீலுமான எம்.ஜே.பாலசுப்பிரமணி கூறியதாவது:-

19 எம்.எல்.ஏ.க்களுக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீசு அனுப்பி உள்ளார். இந்த நோட்டீசுக்கு உரிய நேரத்தில் பதிலளிக்கப்படும். 19 பேரில் ஜக்கையன் எம்.எல்.ஏ. மட்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு சென்று விட்டதால் 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் வெற்றிவேல் எம்.எல்.ஏ., சபாநாயகரை சந்தித்து உள்ளார்.

சபாநாயகரின் நோட்டீசுக்கு உரிய விளக்கத்தை நேரில்தான் அளிக்க வேண்டும் என்பது இல்லை. பேக்ஸ் மூலமும் அனுப்பலாம், தபால் மூலமும் அனுப்பலாம்.

கோர்ட்டில் வாதி ஒருவர் வழக்கு தொடர்ந்தால் ஒவ்வொரு முறையும் அந்த வாதி கோர்ட்டுக்கு வர வேண்டும் என்பது இல்லை. அவர் சார்பில் வக்கீல் வழக்கை நடத்துவார். அதுபோல 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஒரு எம்.எல்.ஏ. நேரில் விளக்கம் அளிக்கலாம். தபால் அல்லது பேக்ஸ் மூலமும் விளக்கம் அளித்து மனு அனுப்பலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News