செய்திகள்

இந்தியாவில் ராகுல்காந்தி பேசுவதை யாரும் கவனிப்பதில்லை - அமித் ஷா கடும் தாக்குதல்

Published On 2017-09-13 07:02 GMT   |   Update On 2017-09-13 07:02 GMT
இந்தியாவில் ராகுல்காந்தி பேசுவதை யாரும் கவனிக்காததால் அவர் அமெரிக்காவிற்கு சென்று தனது கருத்துகளை தெரிவிப்பதாக அமித் ஷா தாக்கி பேசியுள்ளார்.
புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி கலிபோர்னியாவின் பெர்க்லி பல்கலைக்கழக மாணவர்களிடையே நேற்று கலந்துரையாடினார். அப்போது அவர் மோடியின் ஆட்சிமுறை குறித்து தாக்கி பேசினார். இந்திய அரசியல் கட்சிகளில் நிலவிவரும் வாரிசு அரசியல் பற்றியும் அவர் விளக்கமாக பேசினார்.

ராகுலின் பேச்சுக்கு பா.ஜ.க தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:-

நாட்டில் உள்ள பல தலைவர்கள் பேசுவதை இங்கே யாரும் கவனிப்பதில்லை. அதனால், சமீபகாலமாக அவர்கள் அமெரிக்காவிற்கு சென்று உரையாற்றுகின்றனர். பா.ஜ.க. அரசானது நாட்டில் வாரிசு அரசியல் மற்றும் இன அரசியலுக்கு முடிவு கட்டியுள்ளது. நாங்கள் புதிய அரசியல் முறையை செயல்படுத்தி வருகிறோம்

என்று அமித் ஷா கூறினார்.

முன்னதாக, மத்திய மந்திரி ஸ்மிருதி இராணி நேற்று பேசும் போது, “ராகுல் காந்தி தோற்றுப்போன அரசியல் வாரிசு” என குறிப்பிட்டிருந்தார்.

Tags:    

Similar News