செய்திகள்

சீருடை அணியாததால் மாணவியை ஆண்கள் கழிவறையில் நிற்கவைத்து தண்டித்த ஆசிரியர்

Published On 2017-09-11 03:04 GMT   |   Update On 2017-09-11 03:04 GMT
தெலுங்கானா மாநிலத்தில் பள்ளிச்சீருடை சரியாக அணியாததால் 11 வயது மாணவியை ஆண்கள் கழிவறையில் நிற்க வைத்து உடற்கல்வி ஆசிரியர் தண்டித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்த 11 வயது மாணவியின் பெற்றோர் அம்மாணவியின் சீருடையை துவைத்து காயவைத்துள்ளனர். ஆனால், சீருடை உலராததால் வேறு உடையில் மாணவியை பள்ளிக்கு அனுப்பியுள்ளனர். இந்த சம்பவத்தை மாணவின் தனிக்குறிப்பு நோட்டில் (டைரி) அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வேறு உடையுடன் பள்ளிக்குச் சென்ற மாணவியை கண்ட உடற்கல்வி ஆசிரியர் சீருடை குறித்து விசாரித்துள்ளார். அம்மாணவி நடந்ததை கூறியதுடன், தனது டைரியில் பெற்றோர் எழுதியதையும் காட்டியுள்ளார். ஆனால், இதனை ஏற்றுக்கொள்ளாத அந்த ஆசிரியர், மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையில் மாணவியை நிற்க வைத்து தண்டித்துள்ளார்.

இந்த விவகாரம் தற்போது வெளிவந்த நிலையில், ‘நான் கழிவறையில் நிற்கும் போது அனைத்து மாணவர்களும் என்னைப்பார்த்து சிரித்தனர். எனக்கு மிகுந்த அவமானமாக இருந்தது. அந்த பள்ளிக்கு மீண்டும் நான் செல்லமாட்டேன்’ என அந்த மாணவி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இந்த மோசமான செயலில் ஈடுபட்ட ஆசிரியர் மீதும் பள்ளி நிர்வாகம் மீதும் சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகள் நல ஆர்வலர்கள் வேண்டுகொள் விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News