செய்திகள்

கருப்பு பணத்தை மீட்க இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு துணை நிற்போம்: சுவிட்சர்லாந்து அதிபர் உறுதி

Published On 2017-09-02 14:49 GMT   |   Update On 2017-09-02 14:49 GMT
கருப்பு பணத்தை மீட்பதற்கு இந்திய அரசின் முயற்சிகளுக்கு துணை நிற்போம் என்று சுவிட்சர்லாந்து அதிபர் டோரிஸ் லுதர்ட் உறுதி அளித்துள்ளார்.
புதுடெல்லி:

சுவிட்சர்லாந்து அதிபர் டோரிஸ் லுதர்ட் 4 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார்.  இந்தியா-சுவிட்சர்லாந்து ஆகிய இரு நாடுகளுக்கு இடையே தூதரக உறவு ஏற்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சுவிட்சர்லாந்து தூதரகத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த விழாவில் பல நாடுகளை சேர்ந்த தூதர்கள், வர்த்தகர்கள் கலந்துகொண்டர்.

இந்தவிழாவில் சுவிட்சர்லாந்து அதிபர் டோரிஸ் லுதர்ட் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

இந்தியா எங்களின் சிறந்த நண்பன். கடந்த 70 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் ஒருவருக்கொருவர் பரஸ்பர தேவைகளை பறிமாறிக்கொள்கிறோம். நமது உறவின் அடித்தளம் இந்த பரஸ்பரம் தான். கருப்பு பணத்தை மீட்க இந்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கு சுவிட்சர்லாந்து அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.   

இந்திய அரசின் முயற்சிகளுக்கு துணை நிற்போம்.  இந்தியா கேட்கும் தகவல்களை தர நாங்கள் தயாராக உள்ளோம். அதற்கான மசோதாவிற்கு பாராளுமன்றத்தில் அனுமதி கிடைப்பதற்காக நாங்கள் காத்து இருக்கிறோம்.

இவ்வாறு டோரிஸ் லுதர்ட் கூறியுள்ளார்.

இந்தியா – சுவிட்சர்லாந்து தூதரக உறவின் 70வது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் வரும் 2018ம் ஆண்டு வரை நடைபெறும் என தூதரகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News