செய்திகள்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று காஷ்மீர் பயணம்

Published On 2017-08-21 00:50 GMT   |   Update On 2017-08-21 00:50 GMT
நாட்டின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் முதல் அரசு முறை பயணமாக இன்று காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லே பகுதிக்கு செல்கிறார்.
ஸ்ரீநகர்:

நாட்டின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் கடந்த மாதம் 25-ந்தேதி பதவி ஏற்றுக்கொண்டார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் டெல்லியை விட்டு வெளியே செல்லும் முதல் அரசு முறை பயணமாக அவர் இன்று காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லே பகுதிக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் ராணுவ நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார். அங்கு அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் கலந்து கொள்கிறார்.

இந்த தகவலை ராணுவ செய்தி தொடர்பாளர் கர்னல் ராஜேஷ் கலிலா தெரிவித்தார். 
Tags:    

Similar News