செய்திகள்

மும்பை, தானேயில் பலத்த மழை

Published On 2017-08-20 02:53 GMT   |   Update On 2017-08-20 02:53 GMT
மும்பை, தானேயில் நேற்று பலத்த மழை பெய்தது.
மும்பை:

மும்பையில் கடந்த ஜூன் மாதம் மழை காலம் தொடங்கியது. இதில் ஜூன், ஜூலை மாதங்கள் பெய்த அளவிற்கு ஆகஸ்டில் மழை பெய்யவில்லை. இதனால் இன்னும் மும்பைக்கு குடிநீர் வழங்கும் சில ஏரிகள் நிரம்பாமல் உள்ளது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக மும்பையில் மழை பெய்து வருகிறது.

அதில் நேற்று அதிகாலையில் இருந்து பலத்த மழை பெய்தது. குறிப்பாக புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதேபோல தானேயிலும் பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழை நீர் தேங்கி நின்றது.

நேற்று காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை கிழக்கு புறநகர் பகுதியில் 6.16 செ.மீ. மழையும், மேற்கு புறநகர் பகுதியில் 1.62 செ.மீ. மழையும் பதிவாகியது.

இதுகுறித்து இந்திய வானிலை மைய அதிகாரி கோசாலிக்கர் கூறுகையில், “வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் மும்பையில் மழை பெய்கிறது. இந்த மழை நாளை (திங்கள்கிழமை) வரை நீடிக்கும்” என்றார்.
Tags:    

Similar News