செய்திகள்

பெங்களூரு சிறையில் சசிகலாவை டி.டி.வி.தினகரன் இன்று சந்திக்கிறார்

Published On 2017-08-18 03:49 GMT   |   Update On 2017-08-18 03:49 GMT
பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் பெங்களூரு சிறையில் சசிகலாவை டி.டி.வி.தினகரன் இன்று சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
பெங்களூரு:

மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீடு நினைவு இல்லமாக்கப்பட்டு பொதுமக்கள் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு பற்றியும் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து விவாதிக்க டி.டி.வி.தினகரன் நேற்று சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு வந்தார். அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் தங்கி இருப்பதாகவும், இன்று(வெள்ளிக்கிழமை) அவர் சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து பேச இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின்போது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News