செய்திகள்

சுதந்திர தின பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: தீவிரவாதிகள் குறித்து போஸ்டர் வெளியிட்டது டெல்லி காவல்துறை

Published On 2017-08-12 13:10 GMT   |   Update On 2017-08-12 13:10 GMT
சுதந்திர தின பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேடப்பட்டு வரும் தீவிரவாதிகள் குறித்து போஸ்டரை டெல்லி போலீசார் வெளியிட்டுள்ளனர்.
புதுடெல்லி:

இந்தியாவின் சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

டெல்லி செங்கோட்டையில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி மூவர்ண கொடியேற்றி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்ற உள்ளார்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் தீவிரவாதிகள் குறித்த போஸ்டரை டெல்லி போலீசார் நகரம் முழுவதும் ஒட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக டெல்லி போலீசார் கூறுகையில், “போஸ்டர்களில் காணப்படும் தீவிரவாதிகள் குறித்து தகவல் கிடைத்தால், 011-24641278 மற்றும் 011-2301670 என்ற எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும்.

தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் டெல்லி முழுவதும் 14 வேன்கள் இயக்கப்பட உள்ளது. அந்த வேன்களில் ஒரு டிரைவர், ஒரு பொறுப்பாளர் மற்றும் 3 கமாண்டோ படை வீரர்கள் பணியில் இருப்பார்கள்.

அவர்களிடம் ஏ.கே. 47 துப்பாக்கிகள், எம்.பி. 5 ரைபிள்கள், புல்லட் புரூப் ஜாக்கெட் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவார்கள்’’ என தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News