செய்திகள்

வெட்ட வேண்டாம்... பாதுகாப்போம்... - மரங்களுக்கு ராக்கி கட்டிய பழங்குடி பெண்கள்

Published On 2017-08-07 06:52 GMT   |   Update On 2017-08-07 06:52 GMT
ஜார்கண்ட் மாநிலத்தில் மரங்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி பழங்குடி பெண்கள் மரங்களுக்கு ராக்கி அணிவித்து ரக்‌ஷாபந்தனை கொண்டாடினர்.
ராஞ்சி:

ஜார்கண்ட் மாநிலத்தில் மரங்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி பழங்குடி பெண்கள் மரத்திற்கு ராக்கி அணிவித்து ரக்‌ஷாபந்தனை கொண்டாடினர்.

இந்தியாவின் வட மாநிலங்களில் ரக்‌ஷாபந்தன் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த நாளில் தனது சகோதரன் நலமுடன் வாழவேண்டும் என்பதை வலியுறுத்தி அவருடன் பிறந்த சகோதரிகள் கையில் ராக்கி கட்டி விடுவார்கள். ராக்கி கட்டிய சகோதரிகளுக்கு, அவர்கள் கேட்டதை வாங்கிக் கொடுத்து சகோதரர்கள் மகிழ்வார்கள்.

இன்று ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு வடமாநிலங்களில் பெண்கள் தங்களது சகோதரர்களுக்கு ராக்கி அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பல்வேறு இடங்களில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு பெண்கள் ராக்கி அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜம்ஷெட்பூர் பகுதிகளில் உள்ள பழங்குடிகள் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் மரங்களை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மரங்களுக்கு ராக்கி அணிவித்து ரக்‌ஷா பந்தனை வித்தியாசமாக கொண்டாடினர்.
Tags:    

Similar News