செய்திகள்

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக மகா சண்டி யாகம்

Published On 2017-08-05 07:09 GMT   |   Update On 2017-08-05 07:09 GMT
ஜெகன் மோகன் ரெட்டி முதல்- அமைச்சராக வேண்டி அவரது கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் விசாகப்பட்டினத்தில் மகா ருத்ர சாஹித சகஸ்ர சண்டியாகத்தை தொடங்கி உள்ளனர்.
நகரி:

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார்.

இந்த நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி முதல்- அமைச்சராக வேண்டி அவரது கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் விசாகப்பட்டினத்தில் மகா ருத்ர சாஹித சகஸ்ர சண்டியாகத்தை தொடங்கி உள்ளனர்.

ஜெகன்மோகன் ரெட்டி முதல்-மந்திரி ஆகும் வரை யாகம் நடைபெறும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வரை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து யாகம் நடக்கும் என்றும் தெரிவித்தனர்.

இந்த யாகம் சாமியார் நிம்ம பெட்டி சிவராமகிருஷ்ணா தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் ஒய்.எஸ்.ஆர். கட்சி தலைவரும் திருப்பதி தேவஸ்தான முன்னாள் சேர்மனுமான பூமனா கருணாகர் ரெட்டி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், மகா சண்டி யாகத்தில் பங்கேற்கும்படி எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் கலந்து கொண்டேன்.

ஜெகன்மோகன் ரெட்டி முதல்-அமைச்சர் ஆகவும், சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றிக்காகவும் யாகம் நடைபெற்று வருகிறது என்றார்.
Tags:    

Similar News