செய்திகள்

குஜராத்: காங்கிரஸ் கட்சியில் இருந்து 3 எம்.எல்.ஏ.க்கள் விலகி பா.ஜ.க.வில் இணைந்தனர்

Published On 2017-07-27 14:14 GMT   |   Update On 2017-07-27 14:14 GMT
குஜராத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய 3 எம்.எல்.ஏ.க்கள், பா.ஜ.க. அலுவலகம் சென்று தங்களை இணைத்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் தொடர்பான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே, குஜராத் காங்கிரசில் இருந்து சித்பூர் தொகுதி எம்.எல்.ஏ பல்வந்த் சிங் மற்றும் விரம்கம் தொகுதி எம்.எல்.ஏ. தேஜாஸ்ரீ படேல் ஆகியோர் காங்கிரசில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்தனர். இதனால் காங்கிஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் விஜப்பூர் தொகுதி எம்.எல்.ஏவான பி.ஐ.படேல், தானும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.  



இதைதொடர்ந்து, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. அதன்பின்னர், அவர்கள் முன்று பேரும் பா.ஜ.க. அலுவலகம் சென்று தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். ஒரே நாளில் காங்கிரஸ் கட்சியில் இருந்து மூன்று எம்.எல்.ஏ.க்கள் விலகியது கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 60 எம்.எல்.ஏ.க்கள் இருந்த நிலையில், வகேலா உள்பட 4 பேர் பதவி விலகியதால் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 56 ஆக குறைந்துள்ளது.

ஏற்கனவே, குஜராத் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சங்கர்சிங் வகேலா காங்கிரசை விட்டு தமது ஆதரவாளர்களுடன் விலகியதை அடுத்து 3 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸில் இருந்து பிரிந்து பா.ஜ.க.வில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News