செய்திகள்

மலிவு விலையில் தூய்மையான குடிநீர்: ரெயில் நிலையங்களில் மேலும் 1100 தானியங்கி இயந்திரங்கள்

Published On 2017-07-23 09:40 GMT   |   Update On 2017-07-23 09:40 GMT
மலிவு விலையில் தூய்மையான குடிநிர் வழங்குவதற்காக மேலும் 450 ரெயில் நிலையங்களில் 1100 தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்களை அமைக்க ரெயில்வேதுறை திட்டமிட்டுள்ளது.

புதுடெல்லி:

தொலைதூர ரெயில்பயணம் மேற்கொள்பவர்கள் தூய்மையான குடிநீருக்காக அதிக பணம் செலவிட வேண்டியுள்ளது. பயணிகளின் இந்த சிரமத்தை குறைக்கும் வகையில் முக்கிய ரெயில்நிலையங்களில் பாட்டில்களில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை ரெயில்வேதுறை விற்பனை செய்து வருகிறது. 

தானியங்கி இயந்திரங்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கும் முறையை கடந்த 2015-ம் ஆண்டு ரெயில்வேதுறை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின்மூலம், இதுவரை 345 ரெயில்நிலையங்களில் 1106 தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பயணிகள் வசதிக்காக மேலும் 450 ரெயில்நிலையங்களில் 1100 தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்களை வருகிற 2017-2018 நிதியாண்டிற்குள் அமைக்க உள்ளதாக ரெயில்வேதுறை அறிவித்துள்ளது. இதன்மூலம் சுமார் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி, ஒரு ரூபாய்க்கு 300 மி.லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும், அரை லிட்டர் குடிநீர் 3 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் குடிநீர் 5 ரூபாய்க்கும், இரண்டு லிட்டர் குடிநீர் 8 ரூபாய்க்கும் கிடைக்கும். 
Tags:    

Similar News