செய்திகள்

நாகலாந்து: ஆளுங்கட்சியை சேர்ந்த 19 எம்.எல்.ஏ.க்கள் கட்சியிலிருந்து நீக்கம்

Published On 2017-07-22 10:36 GMT   |   Update On 2017-07-22 10:36 GMT
நாகலாந்து சட்டசபையில் முதல்வர் ஜெலியாங்கிற்கு ஆதரவாக வாக்களித்த 19 எம்.எல்.ஏ.க்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 10 எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கவுஹாத்தி:

நாகலாந்தில் நிலவிய அரசியல் குழப்பங்களுக்கு கடந்த 19-ம் தேதி ஆளுநர் ஆச்சாரியா முற்றுப்புள்ளி வைத்தார். முன்னாள் முதல்வர் ஜெலியாங்கிற்கு முதல்வராக ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 22-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறும் ஜெலியாங்கிற்கு ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து, நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 47 வாக்குகள் பெற்று ஜெலியாங் வெற்றி பெற்றார். இவ்வாக்கெடுப்பில் ஜெலியாங்கிற்கு ஆதரவாக வாக்களித்த 19 எம்.எல்.ஏ.க்கள் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளனர். மேலும் 10 எம்.எல்.ஏ.க்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது.

19 எம்.எல்.ஏ.க்கள் கட்சியை பிரிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டதால் அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாகவும், மற்ற 10 எம்.எல்.ஏ.க்கள் கட்சி தலைமை முடிவை மீறி ஜெலியாங்கிற்கு ஆதரவாக வாக்களித்ததால் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாகவும் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு இன்று அறிவித்துள்ளது. ஜெலியாங் ஏற்கனவே முதல்வராக பொறுப்பேற்ற அன்றே கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News