செய்திகள்

டி.டி.வி. தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

Published On 2017-07-21 08:08 GMT   |   Update On 2017-07-21 08:08 GMT
எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் உள்ள அன்னிய செலாவணி மோசடி வழக்கிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
புதுடெல்லி:

அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் மீது எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் பல்வேறு அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.

இதில் தினகரன் வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வருகிறார். அவர் மீது குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் தன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் டி.டி.வி. தினகரன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தினகரன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்றும், கீழ் கோர்ட்டில் நடைபெறும் வழக்கு விசாரணையை முறைப்படி தினகரன் சந்திக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
Tags:    

Similar News