செய்திகள்

அமர்நாத் யாத்திரையில் மாரடைப்பால் பெண் மரணம்: உயிரிழப்பு 23 ஆக உயர்வு

Published On 2017-07-15 09:07 GMT   |   Update On 2017-07-15 09:07 GMT
அமர்நாத் யாத்திரையில் பங்குபெற்ற கார்நாடகாவை சேர்ந்த 58-வயதான பெண் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

ஸ்ரீநகர்:

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். இந்த ஆண்டும் பனிலிங்கத்தை தரிசிக்க திரளான பக்தர்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், யாத்திரையில் பங்குபெற்ற கார்நாடக மாநிலத்தை சேர்ந்த 58 வயதான நிர்மலா பட்டேல் என்ற பெண்ணிற்கு, பல்தால் முகாம் பகுதியில் வைத்து மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. 

உடனடியாக அருகில் உள்ள மருத்துவ முகாமிற்கு எடுத்துசெல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் இந்த வருட யாத்திரையில் உடல்நலகுறைவு, விபத்து போன்ற காரணங்களால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. 
Tags:    

Similar News