செய்திகள்

டெல்லி - வாஷிங்டன் இடையே நேரடி விமான போக்குவரத்து சேவையை தொடங்கியது ஏர் இந்தியா

Published On 2017-07-07 03:29 GMT   |   Update On 2017-07-07 03:29 GMT
இந்தியாவின் டெல்லி மற்றும் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரங்கள் இடையே நேரடி விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் இன்று தொடங்கியுள்ளது.
புது டெல்லி:

இந்தியாவின் டெல்லி மற்றும் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரங்கள் இடையே நேரடி விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் இன்று தொடங்கியுள்ளது.

உள்நாட்டு விமான சேவையில் கவனம் செலுத்திய ஏர் இந்தியா நிறுவனம் தற்போது சர்வதேச அளவில் நேரடி விமான சேவையை விரிவுபடுத்தியுள்ளது. சுமார் 238 பேர் பயணம் செய்யும் திறன் கொண்ட போயிங் ரக விமானம் டெல்லி - வாஷிங்டன் இடையே இன்று தொடங்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன் வரை செல்லும் விமான சேவையை அமெரிக்க தூதரகத்தின் இயக்குனர் மேரிகே லாஸ் கார்ல்சன், ஏர் இந்தியா தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அஸ்வனி லோகானி ஆகியோர் முன்னிலையில், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தொடங்கியது.

டெல்லி - வாஷிங்டன் இடையே வாரம் மூன்று முறை மட்டுமே இந்த விமானம் இயக்கப்படுகிறது. இது தவிர நியூயார்க், நேவார்க், சிக்காகோ மற்றும் ஆகிய நகரங்களுக்கும் தினசரி சேவை அறிமுகப்படுத்தியுள்ளனர். சான் பிரான்சிஸ்கோ நகருக்கு வாரம் 6 முறை விமானம் இயக்கப்படுகிறது

மேலும் அமெரிக்காவின் மற்ற நகரங்களான லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஹூஸ்டனிற்கு விமான சேவையை தொடங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக ஏர் இந்தியா இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News