search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாஷிங்டன்"

    வெள்ளை மாளிகையில் டிரம்ப்பின் நிர்வாக தலைவராக இருக்கும் ஜான் கெல்லி, டிரம்ப் உடனான கருத்து வேறுபாட்டால் பதவி விலகுவதாக தகவல் வெளியான நிலையில், அதிபர் டிரம்ப் அதனை உறுதி செய்துள்ளார். #DonaldTrump #JohnKelly
    வாஷிங்டன்:

    அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பின் நிர்வாக பணியாளர்களின் தலைவராக இருந்து வருகிறார் ஜான் கெல்லி. அவர் இந்த மாதத்தின் இறுதியில் பதவி விலகுகிறார்.

    முன்னாள் கடற்படை அதிகாரியான ஜான் கெல்லி (68 வயது) - ஜனாதிபதி டிரம்ப் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக முன்னதாக தகவல்கள் வெளிவந்தன. அவர் பதவி விலகுவதற்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜான் கெல்லி தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.

    இதனை வெள்ளை மாளிகையில் நிருபர்கள் மத்தியில் பேசிய ஜனாதிபதி டிரம்ப் உறுதி செய்தார். அப்போது அவர் கூறும்போது, “ஜான் கெல்லி விடைபெறுகிறார். அவர் ஓய்வு பெறுகிறாரா என எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால் அவர் மகத்தான பணியாளர். ஆண்டின் இறுதியில் அவர் வெளியேறுகிறார்” என குறிப்பிட்டார்.



    மேலும், “ அவரது இடத்துக்கு வரப்போவது யார் என்பது அடுத்த ஒன்றிரண்டு நாளில் அறிவிக்கப்படும். அவர் என்னோடு கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் இருந்துள்ளார்” என்றும் டிரம்ப் கூறினார். #DonaldTrump #JohnKelly 

    வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டிரம்புடன் பத்திரிகையாளர்கள் மத்தியில் நிகழ்ந்த சர்ச்சை அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #WhiteHouse #Trump #Reporter
    வாஷிங்டன்:

    அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நேற்றுமுன்தினம் இரவு 7 மணிக்கு ஜனாதிபதி டிரம்ப் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அந்த பேட்டியின்போது சி.என்.என். டெலிவிஷன் நிருபர் அகோஸ்டா மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு அகதிகளாக வருவோர் பற்றி டிரம்ப் கூறிய கருத்துக்கு எதிராக கேள்வி எழுப்பினார். நாடு கடந்து அகதிகள் வருவது படையெடுக்க அல்ல என்று அவர் கூறினார்.

    அதைக் கேட்ட டிரம்ப் ஏளனமாக, “ஓ எனக்கு சொல்கிறீர்களா, நன்றி. பாராட்டுக்கள்” என்றார்.

    “அவர்களை ஏன் அப்படி சொன்னீர்கள்?” என அந்த நிருபர் மீண்டும் கேள்வி கேட்க, “நான் அவர்கள் படையெடுக்க வருவதாகத்தான் கருதுகிறேன். உங்களுக்கும் எனக்கும் மாறுபட்ட கருத்து இருக்கிறது” என டிரம்ப் கூறினார்.

    இப்படி இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் டிரம்ப், “என்னை இந்த நாட்டை வழிநடத்த அனுமதியுங்கள். நீங்கள் சி.என்.என். டி.வி. சேனலை நடத்துங்கள். நீங்கள் அதை நன்றாக செய்தால் ‘ரேட்டிங்’ (பார்வையாளர்கள் எண்ணிக்கை) கூடும்” என கூற, அந்த நிருபர் மேலும் கேள்வி கேட்க முயற்சிக்க, அவரிடம் இருந்து வெள்ளை மாளிகை பணியாளர் ஒருவர் ஒலிபெருக்கியை பறித்து வேறு ஒரு நிருபருக்கு தர முயற்சிக்க அவர் தர மறுக்க பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அந்த நிருபரை பயங்கரமான ஆள் என டிரம்ப் கூறியது சர்ச்சையை உண்டாக்கியது.

    இந்த சம்பவத்தின் போது பிற நிருபர்கள் சி.என்.என். நிருபருக்கு ஆதரவாக பேசினர். கடைசியில் சி.என்.என். நிருபர் அகோஸ்டாவின் வெள்ளை மாளிகை அனுமதிச்சீட்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    அமெரிக்காவில் ஏற்கனவே 19 மாநிலங்களில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் 20-வது மாநிலமாக வாஷிங்டனிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. #DeathPenalty
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் ஏற்கனவே 19 மாநிலங்களில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து வாஷிங்டனிலும் அந்த தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது.

    அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரசார இயக்கம் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் அங்கு மரண தண்டனை முற்றிலும் ஒழிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    மரண தண்டனைக்கு எதிராக பிரசார இயக்கம் மேற்கொண்டவர்கள் இதனை வரவேற்றுள்ளனர். இந்த தண்டனை ஒழிக்கப்பட்டதன் மூலம் மரணத்தை எதிர்நோக்கி இருந்த 8 பேரின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் 23 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆனால் வாஷிங்டன் மாகாணத்தில் 2010-ம் ஆண்டில் இருந்து இதுவரை யாருக்கும் அந்த தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

    அமெரிக்காவில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டதில் வாஷிங்டன் 20-வது மாநிலம் ஆகும். #DeathPenalty
    அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பின் போது இடம்பெறவுள்ள 15 பேர் கொண்ட குழுவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. #Trump #Kimjanun #UNSecurityCouncil
    நியூயார்க்:

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அமெரிக்காவுக்கு பகிரங்க அணு ஆயுத மிரட்டல் விடுத்து வந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அண்மைக்காலமாக தனது போக்கை முற்றிலுமாக மாற்றிக்கொண்டார். இனி அணு ஆயுத சோதனைகள் எதையும் நடத்தமாட்டோம் என்றும் அறிவித்தார். மேலும், பகையாளி நாடாக கருதிய தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னையும் சமீபத்தில் சந்தித்து பேசினார்.

    இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுவதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் கிம் ஜாங் அன் கூறினார். இதையடுத்து, இரு தலைவர்களும் ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பின் போது இடம்பெறவுள்ள 15 பேர் கொண்ட குழுவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

    டிரம்ப் - கிம் சந்திப்பின் போது 15 பேர் கொண்ட வடகொரியா அதிகாரிகள் குழுவும் இடம்பெறவுள்ளது. இதற்கான அனுமதி கடிதத்தை ஐநா சபை பாதுகாப்பு கவுன்சிலுக்கு அனுப்பி வைத்தது. இந்த கடிதத்தை பரிசீலித்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், வடகொரிய அதிகாரிகள் சிங்கப்பூர் செல்ல ஒப்புதல் அளித்துள்ளது. #Trump #Kimjanun #UNSecurityCouncil
    சீன அதிபர் ஜி ஜிங்பிங் உடனான சந்திப்புக்கு பிறகு வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன் நடவடிக்கைகளில் மாற்றங்கள் தென்படுகின்றன என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். #Trump #KimJongUn
    வாஷிங்டன்:

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அமெரிக்காவுக்கு பகிரங்க அணு ஆயுத மிரட்டல் விடுத்து வந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அண்மைக்காலமாக தனது போக்கை முற்றிலுமாக மாற்றிக்கொண்டார். இனி அணு ஆயுத சோதனைகள் எதையும் நடத்தமாட்டோம் என்றும் அறிவித்தார். மேலும், பகையாளி நாடாக கருதிய தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னையும் சமீபத்தில் சந்தித்து பேசினார்.

    இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுவதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் கிம் ஜாங் அன் கூறினார். இதையடுத்து, இரு தலைவர்களும் ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.



    இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜிங்பிங் உடனான சந்திப்புக்கு பிறகு வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்படுகின்றன என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், சீன அதிபர் ஜி ஜிங்பிங் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பு கடந்த 8-ம் தேதி நடைபெற்றது. 

    சீன அதிபருடனான சந்திப்புக்கு பிறகு கிம் ஜாங் அன் நடவடிக்கைகளில் பல்வேறு மாறுபாடுகள் தென்படுகின்றன. இது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். #Trump #KimJongUn  
    ×