செய்திகள்

நடுவானில் விமானத்தில் பிறந்த குழந்தைக்கு அடித்த அதிர்ஷ்டம்

Published On 2017-06-18 16:19 GMT   |   Update On 2017-06-18 16:19 GMT
சவுதி அரேபியாவில் இருந்து கொச்சி நோக்கி சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தில், நடுவானில் ஒருவருக்கு குழந்தை பிறந்ததால் மும்பைக்கு அவசரமாக திருப்பி விடப்பட்டது.
மும்பை:

ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று சவுதி அரேபியாவின் தம்மாம் நகரில் இருந்து கொச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போதே, ஒரு பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. 

குழந்தை பிறந்ததும் அதன் தாய் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளார். அதேபோல், ஜெட் ஏர்வேஸ் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக விமானத்தில் பிறந்த அந்த குழந்தை தனது வாழ்நாள் முழுவதும் விமானத்தில் இலவசமாக செல்ல சலுகை அறிவித்துள்ளது.

162 பயணிகளுடன் சென்ற ஜெட் ஏர்வேஸின் போயிங்-737 விமானம் உடனடியாக மும்பைக்கு திருப்பி விடப்பட்டது.

விமான பயணிகளின் உதவியாலும், பயிற்சி பெற்ற துணை மருத்துவர் ஒருவர் இருந்ததால் 35 ஆயிரம் அடி உயரத்தில் வெற்றிகரமாக பிரசவம் பார்க்கப்பட்டது.

மும்பை விமானம் திரும்பியதும், குழந்தையும் தாயும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருவரும் நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News