செய்திகள்

சட்ட விரோதமாக மரம் வெட்டியவருக்கு ரூ.4.68 லட்சம் அபராதம்

Published On 2017-06-09 20:26 GMT   |   Update On 2017-06-09 20:26 GMT
உத்திர பிரதேச மாநிலத்தின் அமேதி பகுதியில் சட்ட விரோதமாக மரம் வெட்டியவருக்கு ரூ.4.68 லட்சம் அபராதம் விதித்து மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
அமேதி:
    
உத்திர பிரதேச மாநிலத்தின் அமேதி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மரம் வெட்டிய நபருக்கு மாவட்ட மாஜிஸ்திரேட் ரூ.4.68 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

அமேதி மாவட்டத்தின் முசாஃபிர்கானா மாஜிஸ்திரேட் அபய் குமார் பாண்டே விதித்த தீர்ப்பில் இனாமுல்லா புர் சுசித் மாநில கஜானாவிற்கு ரூ.4.68 லட்சம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த 2016 பிப்ரவரியில் புர் சுசித் மாநிலம் முழுக்க சுமார் 250க்கும் அதிகமான நீலகிரி மரங்களை வெட்டியுள்ளார் என பான்டே தெரிவித்துள்ளார். இதுகுறித்து கிராமவாசி வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இருதரப்பு வாதங்களை கேட்டறிந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதேபோல் வெட்டப்பட்ட மரங்களின் முழுமையாக மதிப்பீடு செய்து அதற்கான தொகையை இனாமுல்லா செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News