செய்திகள்

பீகாரில் விற்காத மதுவை வெளிமாநிலங்களில் விற்க ஜூலை 31 வரை அனுமதி: சுப்ரீம் கோர்ட்டு

Published On 2017-05-29 08:20 GMT   |   Update On 2017-05-29 08:20 GMT
பீகாரில் விற்காத மதுவை வெளிமாநிலங்களில் விற்க ஜூலை 31 வரை அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி:

பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான அரசு கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் பூரண மதுவிலக்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் அங்கு மதுபான நிறுவனங்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது. மேலும் ரூ.200 கோடி மதுபானங்கள் விற்பனை இன்றி தேக்கம் அடைந்துள்ளது.

எனவே விற்பனை செய்யாமல் இருக்கும் ரு.200 கோடி மதுபானங்களை மதுவிலக்கு அமலில் இல்லாத மாநிலங்களில் விற்க அனுமதி கேட்டு இந்திய மதுபான நிறுவனங்கள் கூட்டமைப்பு சார்பில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.


இந்த வழக்கு விடுமுறை கால நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர் வருகிற ஜூலை 31-ந்தேதி வரை வெளி மாநலங்களில் மது விற்பனை செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டார்கள்.

Tags:    

Similar News