செய்திகள்

அமிர்தசரஸ் ஏர்போர்ட்டில் லைவ் கேட்ரிஜ்களுடன் அமெரிக்கர் கைது

Published On 2017-05-24 16:27 GMT   |   Update On 2017-05-24 16:28 GMT
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் வெடிபொருட்களுடன் வந்த அமெரிக்கர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அமிர்தசரஸ்:

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு இன்று ஒரு விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் உடமைகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த ஜார்ஜ் டேனிட் கில்பர்ட் என்பவரின் லக்கேஜை பரிசோதனை செய்தபோது, அவர் 38 போர் கேலிபர் ரக துப்பாக்கிகளுக்கான லைப் கேட்ரிஜ்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரது லக்கேஜில் இருந்த 5 லைவ் கேட்ரிட்ஜ்களை அதிகாரிகள் கைப்பற்றினர். பின்னர் இதுபற்றி விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், லைவ் கேட்ரிட்ஜ்களை கொண்டு வந்த அமெரிக்கரை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். ஆயுத தடுப்புச் சட்டத்தின்கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் காவல்துறை விசாரணை நடத்தியபோது, தான் தொழில்முறை துப்பாக்கி சுடும் வீரர் என்றும், இந்தியாவுக்கு வரும்போது தவறுதலாக கேட்ரிட்ஜ்களை கொண்டு வந்ததாகவும் கூறியுள்ளார்.
Tags:    

Similar News