செய்திகள்

ராஷ்டிரீய ஜனதாதள முன்னாள் எம்.பி.க்கு ஆயுள் தண்டனை

Published On 2017-05-24 03:12 GMT   |   Update On 2017-05-24 03:12 GMT
முன்னாள் எம்.எல்.ஏ. கொலை வழக்கில் ராஷ்டிரீய ஜனதாதள முன்னாள் எம்.பி.க்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
ஹசாரிபாக்:

லாலுபிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரீய ஜனதாதள முன்னாள் எம்.பி. பிரபுநாத் சிங். கடந்த 1995-ம் ஆண்டு ஜூலை மாதம், முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் சிங் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, அவருடைய மனைவி, பிரபுநாத் சிங், அவருடைய சகோதரர்கள் தீனாநாத் சிங், ரிதேஷ் சிங் ஆகியோர் மீது போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், பிரபுநாத் சிங் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் உள்ள கூடுதல் மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடந்தது. பிரபுநாத் சிங் உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என்று கடந்த 18-ந் தேதி நீதிபதி சுரேந்திர சர்மா தீர்ப்பு அளித்தார். இந்நிலையில், தண்டனை விவரங்கள் நேற்று அறிவிக்கப்பட்டது.

3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தலா ரூ.40 ஆயிரம் அபராதமும், அதை செலுத்த தவறினால், கூடுதலாக 6 மாதம் ஜெயில் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். 
Tags:    

Similar News