செய்திகள்

உத்தரகாண்டில் 3 தெருநாய்களை கொன்ற ராணுவ அதிகாரி

Published On 2017-05-19 00:45 GMT   |   Update On 2017-05-19 00:45 GMT
உத்தரகாண்டில் மூன்று தெருநாய்களை கொலை செய்த ராணுவ அதிகாரி மணிஷ் தாபா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராணுவ தளபதி பிபின் ராவத்துக்கு கோரிக்கை விடப்பட்டு உள்ளது.
டேராடூன்:

உத்தரகாண்டின் டேராடூன் அருகே உள்ள கார்கி ராணுவ கண்டோன்மெண்டில் வசித்து வருபவர் மணிஷ் தாபா. ராணுவ அதிகாரியான இவர் கடந்த 11-ந் தேதி மாலையில் தனது வளர்ப்பு நாயுடன் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது மற்றொரு ராணுவ அதிகாரி சில தெருநாய்களுக்கு உணவு அளித்துக்கொண்டு இருந்தார். மணிஷ் தாபாவின் நாயை பார்த்ததும், அந்த தெருநாய்கள் குரைத்தன.

இதனால் ஆத்திரம் அடைந்த மணிஷ் தாபா அந்த அதிகாரியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதுடன், அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து அந்த தெருநாய்களை தாக்கினார். இதில் 3 நாய்கள் இறந்ததுடன், 2 நாய்கள் பலத்த காயமடைந்தன.

இந்த சம்பவம் தொடர்பாக பிராணிகள் நல அமைப்பினர் கண்டோன்மெண்ட் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ராணுவமும் விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையே தெருநாய்களை கொலை செய்த மணிஷ் தாபா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராணுவ தளபதி பிபின் ராவத்துக்கு கோரிக்கை விடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக 2 ஆயிரம் கையெழுத்துகள் அடங்கிய கோரிக்கை மனு ஒன்று பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. 
Tags:    

Similar News