செய்திகள்

மத்திய மந்திரி தவே மறைவுக்கு துக்கம்: தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட அரசு உத்தரவு

Published On 2017-05-18 07:44 GMT   |   Update On 2017-05-18 07:44 GMT
மத்திய மந்திரி அனில் மாதவ் தவே மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில், அரசு கட்டிடங்களில் தேசியக் கொடிகளை இன்று அரைக்கம்பத்தில் பறக்க விட அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி அனில் மாதவ் தவே (வயது 60), திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடல் டெல்லியில் இருந்து சொந்த மாநிலமான மத்திய பிரதேசத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்படுகிறது.

இந்நிலையில், மந்திரி தாவே மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் டெல்லியில் உள்ள அனைத்து அரசு அலுவலக கட்டிடங்கள் மற்றும் மாநில தலைநகரங்களில் தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.



இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அனில் மாதவ் தவே மறைவுக்கு மத்திய அரசு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், டெல்லி மற்றும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேசியக்கொடிகள் வழக்கமாக பறக்கும் அரசு அலுவலகங்களில் இன்று தேசியக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இறுதிச் சடங்கு செய்யும் நாளிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது” என கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News