செய்திகள்

சொத்துகுவிப்பு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா உள்ளிட்டோர் மறுசீராய்வு மனு தாக்கல்

Published On 2017-05-03 16:55 GMT   |   Update On 2017-05-03 16:55 GMT
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.
புதுடெல்லி:

அ.தி.மு.க (அம்மா) பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக சிறப்பு நீதிமன்ற விதித்த 4 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் உறுதி செய்தது. இதனால் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், 4 ஆண்டு சிறை தண்டனையை மறுபரிசீலனை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவர் சார்பில் மறுசீராய்வு மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனுவில் வழக்கில் இருந்து முழுமையாக தங்களை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இம்மனு உச்ச நீதிமன்ற பதிவாளரின் பரிசீலனைக்கு விரைவில் எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. அதன் பின்னர், இம்மனு ஏற்கப்படுமா? அல்லது நிராகரிக்கப்படுமா? என்பது தெரியவரும். ஏற்கனவே, அ.தி.மு.க.வில் உட்கட்சிப் பிரச்சனை நிலவி வரும் நிலையில் தற்போது சசிகலா தாக்கல் செய்துள்ள மனு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News