செய்திகள்

லண்டன் - டெல்லி விமானத்தில் திடீர் பரபரப்பு: ஆக்சிஜன் முகமூடிகள் வெளிவந்ததால் பயணிகள் அலறல்

Published On 2017-04-29 21:06 GMT   |   Update On 2017-04-29 21:06 GMT
லண்டனில் இருந்து டெல்லி புறப்பட்ட விமானத்தில் திடீரென ஆக்சிஜன் முகமூடிகள் வெளிவந்ததால் பயணிகள் பீதியடைந்தனர். இதையடுத்து விமானம் லண்டனுக்கு திரும்பி அனுப்பிவைக்கப்பட்டது.
லண்டன்:

பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து டெல்லிக்கு நேற்றிரவு பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது திடீரென அவசர கால ஆக்சிஜன் முகமூடிகள் வெளிவந்தது. இதனால் பயணிகள் கடும் பீதியடைந்தனர்.

இதனையடுத்து, அந்த விமானம் லண்டனுக்கு திரும்பியது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விமான நிறுவனம் ,” விமானத்தில் திடீரென ஏர் பிரஷர் காரணமாக ஆக்சிஜன் முகமூடிகள் வெளிவந்தது. பயணிகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர். வேறு விமானம் ஏற்பாடு செய்து பயணிகள் டெல்லி அனுப்பிவைக்கப்படுவர்” எனக் கூறியுள்ளது.


ஆக்சிஜன் முகமூடி என்பது விமானப் பயணத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் பயணிகளுக்கு சீராக ஆக்சிஜன் கிடைக்க வழி செய்யும் அமைப்பாகும்.
Tags:    

Similar News