செய்திகள்

நாயை சுட்டுக்கொன்ற அரசு அதிகாரி கைது: உ.பி-யில் பரபரப்பு

Published On 2017-03-27 14:27 GMT   |   Update On 2017-03-27 14:27 GMT
நாயை சுட்டுக்கொன்ற அரசு அதிகாரி போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சம்பவம், உத்தர பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மொராதாபாத்:

உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியை சேர்ந்தவர் விமல் தீர்(59). இவர் அப்பகுதியிலுள்ள எஸ்.சி/எஸ்.டி நலத்துறையில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். கடந்த சனிக்கிழமை மாலை கன்ஷிராம் பகுதியிலுள்ள தனது வீட்டில் இருந்து சாலையில் விமல் நடைபயிற்சி செய்துள்ளார்.



அப்போது அப்பகுதியில் உள்ள அசோக்குமார் என்பவரது நாய் இவரைப் பார்த்து குரைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த விமல் தனது கைத்துப்பாக்கியை எடுத்து நாயை சுட்டுக்கொன்றார். இதைத்தொடர்ந்து விமல் தனது நாயை குடிபோதையில் சுட்டுக்கொன்றதாக குமார் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

குமாரின் புகாரையடுத்து விமலை போலீசார் கைது செய்தனர். எனினும் இடைக்கால ஜாமீனில் விமல் தற்போது வெளியே வந்து விட்டார். வருகின்ற 31-ம் தேதி விமல் தீர் ஓய்வு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News