செய்திகள்

கருப்பு பண விவகாரம்: கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்பில்லை என மத்திய அரசு திட்டவட்டம்

Published On 2016-09-23 21:04 GMT   |   Update On 2016-09-23 21:04 GMT
கருப்பு பணம் குறித்த விவரங்களை தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்பில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

கருப்பு பண விவரங்களை, தானாக முன்வந்து தெரிவித்து, சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்க 4 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஜூன் 1–ந்தேதி தொடங்கிய இத்திட்டம் செப்டம்பர் 30–ந்தேதி முடிவடைகிறது.

இந்த காலகட்டத்தில், தங்களது கருப்பு பண விவரங்களை அளிப்பவர்கள், 45 சதவீத வரி மற்றும் அபராதம் செலுத்தி, வழக்கில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

ஆனால், செப்டம்பர் 30–ந்தேதிக்குள் கருப்பு பண விவரங்களை அளிக்காதவர்கள் மீது, அதன்பிறகு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

செப்டம்பர் 30-ம் தேதிக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், கருப்பு பண விவரங்களை அளிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வருமான வரி விவரங்களை தாக்கல் செய்வதற்கான தேதி மேலும் நீட்டிக்கப்படுமா என்று பல்வேறு தரப்பில் இருந்து எதிர்பார்ப்புகள் எழுந்ததாகவும், ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்றும் வருவாய் துறை செயலாளர் ஹாஸ்முக் அதியா தெரிவித்தார்.

Similar News