செய்திகள்

மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் கோபுர கலசங்கள் தங்கத்தில் வைக்க ஏற்பாடு

Published On 2016-09-10 05:55 GMT   |   Update On 2016-09-10 05:55 GMT
மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் கோபுர கலசங்கள் தங்கத்தில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீகாளஹஸ்தி:

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதையொட்டி விழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் கோவில் நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கோவில் அறங்காவலர் குழு தலைவர் குருவய்ய நாயுடு தலைமை தாங்கினார்.

ஸ்ரீகாளஹஸ்தி சிவன்கோவிலில் 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ந் தேதியில் இருந்து பிப்ரவரி மாதம் 8-ந் தேதி வரை மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதனையொட்டி கோவிலில் அனைத்து கோபுரங்களும் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. அத்துடன் கொடி மரத்துக்கு ரூ.4 கோடியே 10 லட்சத்து 62 ஆயிரத்து 500 செலவில் தங்கத்தகடு பொருத்தும் பணி நடந்து வருகிறது. இந்தச் செலவை, ஒரு பக்தர் காணிக்கையாக ஏற்றுள்ளார்.

கோவிலில் உள்ள கோபுர கலசங்கள் தங்கத்தால் வைக்க திட்டமிட்டுள்ளோம். ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலானது உலக புகழ்பெற்ற வாயு தலம் என்பதால், அதன் சிறப்பை உலகெங்கும் பரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்காக, கோவில் கோபுர கலசங்கள் தங்கத்தால் தயார் செய்து வைக்க உள்ளோம்.

பிக்சால கோபுரத்தில் உள்ள 11 கலசங்கள் ரூ.8 லட்சத்து 21 ஆயிரத்து 250 செலவில் தங்கத்தால் அமைக்கப்பட உள்ளது. கலர் கோபுரத்தில் உள்ள 7 கலசங்கள் ரூ.6 லட்சத்து 57 ஆயிரம் செலவிலும், சிவய்ய கோபுரத்தில் உள்ள 7 கலசங்கள் ரூ.7 லட்சத்து 39 ஆயிரத்து 125 செலவிலும் தங்கத்தால் தயார் செய்து வைக்கப்பட உள்ளது.

திருமஞ்சன கோபுரத்தில் உள்ள 7 கோபுரங்கள் ரூ.7 லட்சத்து 39 ஆயிரத்து 125 தங்கத்தால் தயார் செய்து வைக்கப்பட உள்ளது. தெற்குக் கோபுரத்தில் உள்ள 7 கலசங்கள் ரூ.6 லட்சத்து 57 ஆயிரம் செலவில் தங்கத்தால் தயார் செய்து வைக்கப்பட உள்ளது. நுழைவு வாயில் கோபுரத்தில் உள்ள 7 கலசங்கள் ரூ.10 லட்சத்து 67 ஆயிரத்து 625 செலவில் தங்கத்தால் தயார் செய்து வைக்கப்பட உள்ளது. ஆக மொத்தம் 46 கலசங்கள் ரூ.46 லட்சத்து 81 ஆயிரத்து 125 செலவில் தங்கத்தால் தயார் செய்து வைக்கப்பட உள்ளது.

மேலும், ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோபுர விமானம் ரூ.6 லட்சத்து 40 ஆயிரத்து 575 செலவில் தங்கத்தால் தயார் செய்து வைக்கப்பட உள்ளது. ஞானபிரசுனாம்பிகை தாயார் விமான கோபுரத்தில் உள்ள 3 கலசங்கள் ரூ.3 லட்சத்து 94 ஆயிரத்து 200 செலவில் தங்கத்தால் தயார் செய்து வைக்கப்பட உள்ளது. நடராஜசாமி கோபுரத்தில் உள்ள 3 கலசங்கள் ரூ.2 லட்சத்து 46 ஆயிரத்து 375 செலவில் தங்கத்தால் தயார் செய்து வைக்கப்பட உள்ளது.

இவ்வாறு குருவய்யநாயுடு கூறினார்.

Similar News