செய்திகள்

மராட்டிய மாநிலம் ஆற்றுப்பாலம் விபத்து: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு

Published On 2016-08-06 09:13 GMT   |   Update On 2016-08-06 09:13 GMT
மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள சாவித்ரி ஆற்றின் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
மும்பை:

மராட்டிய மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மும்பை உட்பட பல்வேறு இடங்களில் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பை-கோவா நகரங்களை இணைக்கும் வகையில் ராய்காட் மாவட்டத்தின் மஹத் பகுதியில் கட்டப்பட்டிருந்த சாவித்ரி ஆற்றுப்பாலம் கடந்த செவ்வாய் இரவு உடைந்து விழுந்தது.

இதில் 2 பஸ்கள் உட்பட அந்த வழியாக சென்ற வாகனங்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.மேலும் பஸ்ஸில் பயணித்த  42 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து போலீஸ் தரப்பில் தேடுதல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு 17 பிரேதங்களை மீட்டிருந்தனர். இந்நிலையில் பலி எண்ணிக்கை 24 ஆக உயர்ந்ததாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

தேடுதல் பணியில் 20 படகுகள் உட்பட 160 நபர்கள் ஈடுபட்டுள்ளனர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்ச ரூபாய் நிதி அளிப்பதாக மராட்டிய முதல் மந்திரி தேவேந்திர பட்நவாஸ் அறிவித்திருக்கிறார்.

Similar News