செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக பூத் சிலிப் வினியோகம் தொடங்கியது

Published On 2019-04-14 06:26 GMT   |   Update On 2019-04-14 08:18 GMT
தமிழ்நாடு முழுவதும் வாக்காளர்கள் ஓட்டு போட கொண்டு செல்லக் கூடிய பூத் சிலீப் தேர்தல் அலுவலர்கள் மூலம் வீடு வீடாக வினியோகிக்கப்பட்டு வருகிறது. #LokSabhaElections2019 #BoothCilip

சென்னை:

பாராளுமன்ற மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் கமி‌ஷன் விரிவாக செய்துள்ளது.

இந்த தேர்தலில் 67 ஆயிரத்து 500 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

திருத்தப்பட்ட பட்டியல் படி தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 98 லட்சத்து 69 ஆயிரத்து 758 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஓட்டு போடுவதற்கு வசதியாக புதிதாக பெயர் சேர்த்தவர்களுக்கும், புகைப் படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை தயாரிக்கப்பட்டு வீடு வீடாக வினியோகிக்கப்பட்டு வருகிறது.

மேலும் 18-ந்தேதி ஓட்டு போட கொண்டு செல்லக் கூடிய ‘பூத்’ சிலிப் தேர்தல் அலுவலர்கள் மூலம் இப்போதே வீடு வீடாக வினியோகிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு வாக்காளரின் புகைப்படமும் பெரிய அளவில் அச்சிட்டு பெயர், பாகம் எண், வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிக்கூட விவரம் அனைத்தும் அதில் அச்சிடப்பட்டுள்ளது.

இந்த பூத் சிலிப்புடன் ஓட்டு போட காண்பிக்க வேண்டிய 11 ஆவணங்களுக்கான பட்டியல் விவரத்தையும் இணைத்து வீடு வீடாக வழங்கி வருகிறார்கள்.

அந்தந்த பகுதியில் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் வழக்கமான ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வீடு வீடாக இந்த பூத் சிலீப் வழங்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

வருகிற 17-ந்தேதிக்குள் பூத் சிலிப் அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்கப்பட்டு விடும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #LokSabhaElections2019

Tags:    

Similar News