உள்ளூர் செய்திகள்

சராசரி மழை அளவை எட்டியது திருப்பூர்

Published On 2023-01-05 05:53 GMT   |   Update On 2023-01-05 05:53 GMT
  • சராசரியாக 876.21 மி.மீ., மழை பெய்துள்ளது.
  • கடந்த ஆண்டில் மட்டும் 75 நாட்கள் மழை பெய்துள்ளது.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் (2022) வடகிழக்கு பருவமழை சற்று குறைவாக இருந்தாலும், சராசரியாக 876.21 மி.மீ., மழை பெய்துள்ளது.குளிர்பருவத்தில் 14 மி.மீ., சராசரி மழை அளவு.ஆனால் கடந்தாண்டு 15.22 மி.மீ., மழை பெய்துள்ளது. கோடை பருவத்தில் 135.10 மி.மீ., என்பது சராசரி. கடந்தாண்டு 195.73 மி.மீ., மழை கிடைத்துள்ளது.

தென்மேற்கு பருவத்தில் 154.80 மி.மீ., சராசரி.கடந்தாண்டு 100 செ.மீ., கூடுதலாக மழை பெய்தது.அதாவது 266.19 மி.மீ., மழை பதிவானது.வடகிழக்கு பருவத்தில் 314.30 மி.மீ., என்ற இயல்பான அளவை காட்டிலும் கூடுதலாக மழை பெய்யும். கடந்தாண்டு 399.07 மி.மீ., அளவுக்கு மழை பெய்துள்ளது. 2021ம் ஆண்டில் 516.51 மி.மீ., அளவுக்கு வடகிழக்கு பருவமழை பெய்திருந்தது. கடந்த ஆண்டு, 399.07 மி.மீ., அளவுக்கு பெய்துள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இயல்பான அளவுக்கு மழை கிடைக்கவில்லை.6.90 மி.மீ., என்பதற்கு பதிலாக 0.18 மி.மீ., மட்டுமே பதிவானது. மார்ச் மாதம் 13.40 என்பது சராசரி. ஆனால் 6.31 மி.மீ., மட்டுமே மழை பதிவாகியுள்ளது. ஏப்ரல் மாதம் மூன்று மடங்கு அதிகம் மழை பெய்ததால் மாவட்டம் சராசரி மழை அளவை எட்டியுள்ளது.குளிர்பருவத்தில் இரண்டு நாட்கள் கனமழை பெய்துள்ளது. அதேபோல் கோடையில் 17 நாட்களும், தென்மேற்கு பருவத்தில் 27 நாட்களும், வடகிழக்கு பருவத்தில் 29 நாட்களும் மழை பெய்துள்ளது. அதாவது கடந்த ஆண்டில் மட்டும் 75 நாட்கள் மழை பெய்துள்ளது. 

Tags:    

Similar News