உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காட்சி. 

திருப்பூரில் அனைத்து திருச்சபைகள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-08-10 10:35 GMT   |   Update On 2022-08-10 10:35 GMT
  • தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க கோரிக்கை.
  • மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

திருப்பூர் :

தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க கோரி அனைத்து திருச்சபைகளின் கூட்டமைப்பு மற்றும் தேசிய தலித் கிறிஸ்தவர் பேரவை சார்பில் அறப்போராட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்றது.

இதில் டி.இ.எல்.சி., மேற்கு மண்டல கண்காணிப்பு ஆயர் கிறிஸ்டோபர் செல்லப்பா ,பொள்ளாச்சி மறை மாவட்டதலைவர் தன்ராஜ், கோவை மறை மாவட்டம் சார்லஸ் தேவநேசன், சி.எஸ்.ஐ. ஏரியா சேர்மன் எட்வின் ராஜ்குமார், பங்குதந்தை ஹியாசிந்த் ஆகியோர் தலைமை தாங்கினர். தேசிய திருஅவைகளின் ஆலோசனை கூடடமைப்பு ஒருங்கிணைப்பாளர் சார்லஸ் சுந்தர்குமார், ஆயர் கிறிஸ்டியன் சாம்ராஜ், ராஜ் மோகன் குமார் ஆகியோர் தொடக்க உரையாற்றினர்.

சி.எஸ்.ஐ. பிரின்ஸ் கால்வின், பிஷப் எட்வின் ஜெயக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி ரவிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். மத்திய அரசால் அமைக்கப்பட்ட பல்வேறு கமிஷன்களும் பெரும்பாலான அரசியல் கட்சிகளும், தலித் கிறிஸ்தவர்களுக்கு எஸ்.சி. உரிைம வழங்கலாம் என பரிந்துரைத்த பின்னரும் கூட மத்திய அரசால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே தலித் கிறிஸ்தவர்களின் உரிைமயை வென்றெடுப்பதற்காக திருச்சபை, சபை வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து இந்த உரிமையை பெறுவதற்கு போராடுவோம் என கூட்டமைப்பு , பேரவை நிர்வாகிகள் தெரிவித்தனர்.  

Tags:    

Similar News